Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் அக்காவையும், அவரது குழந்தையும் கொன்ற தங்கை கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (46). இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சுமதி (21), இளைய மகள் சுஜாதா (20) ஆகியோருக்கு திரு மணமாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக 2 மகள்களும் தாய் வீட்டில் வசித்து வந் தனர். சம்பவத்தன்று இவர்களது தாய் செல்வி மற்றும் தந்தை சின்னசாமி ஆகிய இருவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, மூத்த மகள் சுமதி தன் மீதும், அவரது ஒன்றரை வயதுபெண் குழந்தை மீதும் மண் ணெண்ணை ஊற்றி தீ வைத்ததாக, வீட்டில் வெளியே நின்று கொண் டிருந்த அவரது தங்கை சுஜாதா கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத் தினர் உதவியுடன் இருவரும் வேப் பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு சென்னைகீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழயில் சுமதி உயிரிழந்தார். சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் குழந்தை நிதி உயிரிழந்தது.
இதுகுறித்து சுமதியின் தந்தைசின்னசாமி வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். சுமதிக்குதிருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆனதால் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் காந்த் மேல் விசா ரணை நடத்தி வருகிறார்.
சென்னை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து நேற்று முன்தினம், சுமதி மற்றும் அவரது குழந்தை உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. சுமதி, குழந்தை நிதி இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்களது உடல்களுடன், அசகளத்தூர் அண்ணாநகர் மேட்டுகாலனி மெயின் ரோட்டில் சுமதியின் கணவர் இளையராஜா மற்றும் அவரது உறவினர் கள் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மற் றும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனை வரும் கலைந்துச் சென்றனர். புகாரின் பேரில் சுமதியின் தங்கை சுஜாதாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறில் அவர், சுமதியை கொடுவாளால் வெட்டி, இருவர் மீதும் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து சுஜாதாவை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT