Regional02
மதுரையை சேர்ந்தவர் விழுப்புரத்தில் தற்கொலை
மதுரையைச் சேர்ந்தவர் நாரா யணன் (50). இவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி யில் கடந்த 28-ம் தேதி முதல் தங்கிருந்தார்.
நேற்று காலை நீண்ட நேர மாகியும் அவர் வெளியே வரவில்லை. இதுகுறித்து விடுதி நிர்வாகம் விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது நாராயணன் தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது. அவர் எழுதிய கடிதத்தில், ”எனக்கு வாழ பிடிக்கவில்லை.
என் இறப்புக்கு யாரும் காரணமில்லை” என்று தெரி வித்துள்ளார். இதுகுறித்து விழுப் புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
