Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

‘விசாரணையின்றி இடமாற்றம் செய்யக் கூடாது’

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலாளர் மணிராஜ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் சிவகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் அந்தோனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பணியின்போது உயிரிழக்கும் ஊராட்சி செயலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். போதிய நிதியில்லாமல் தடுமாறும் ஊராட்சிகளில் ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் வெளியான பணிமூப்புப் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். உரிய விசாரணையின்றி இடமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x