Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று உணவு இடைவேளையின்போது திருநெல்வேலியில் மண்டல பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கே.எஸ். முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. பிறவிப்பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க பொதுச் செயலாளர் கே.நாகராஜன், அனைத்து துறைஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குமாரவேல், வட்டக்கிளை சார்பில் பேச்சிநாதன் ஆகியோர் பேசினர். கிளை பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாண்டுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT