Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

சிவகங்கை மாவட்ட மும்முனை மின் விநியோகத்தில் மாற்றம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை மின்நிலையங்களிலும் உள்ள ஊரக மின்னூட்டிகளில் ( பீடர்ஸ்) விவசாய மின் இணைப்புகளுக்கு பகுதி-1-ல் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல் பகுதி-2-ல் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஆனால், இரவில் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x