சத்துணவு ஊழியர்களுக்குரூ.7500 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

சத்துணவு ஊழியர்களுக்குரூ.7500 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

Published on

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில பொருளாளர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடையினை, ரூ.1 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பலன் ரூ.1 லட்சம் என்பதை, ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ள கடைசி ஓய்வூதியம் தொகையான ரூ-.7 ஆயிரத்து 550 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in