Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர் களின் கல்லறையில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
கல்லறை திருநாளை முன் னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சூசையப்பர் கல்லறைத் தோட்டம், வியாகு லமாதா கல்லறைத் தோட்டம், திருஇருதய ஆண்டவர் கல்லறைத் தோட்டம், மிஷின் தெருவில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் உள்ள தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் நேற்று சமூக இடைவெளியோடு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதையொட்டி, கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர், மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். மேலும் இனிப்பு, பழங்கள் ஆகிய வற்றை வைத்து படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி வைத்தனர்.
தஞ்சாவூர் திருஇருதய ஆண் டவர் கல்லறைத் தோட்டத்தில், இறந்த குருக்களின் கல்லறைகளில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் சிறப்பு வழிபாடு செய்தார். வழக்க மாக பூக்காரத் தெரு தூய இருதய ஆண்டவர் பேராலயம், வியாகுலமாத பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் கரோனா தொற்று முன்னெச் சரிக்கை நடவடிக்கையின் காரண மாக நேற்று ரத்து செய்யப்பட்டது.
கும்பகோணத்தில்...
வேளாங்கண்ணியில்...
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு நேற்று சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பேராலயம் முன்பு சிலுவை குறியிட்டு, இறந்த பாதிரியார்களின் ஆன்மா சாந்தியடைய பேராலய பங்குத் தந்தை சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம் அடிகளார், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், அருட் சகோதரிகள், பேராலய ஊழியர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.வேளாங்கண்ணி அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் மாதா குளம் அருகே உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் ஏராளமானோர் மெழுகுவத்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.
திருச்சியில்...
திருச்சியில் உள்ள பல்வேறு கல்லறைத் தோட்டங்களில் ஆயர்கள் மற்றும் பங்குத்தந்தைகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தங்கள் உறவினர்க ளின் கல்லறைகளைச் சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மறைந்தவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கிறிஸ்தவ ஆலயங்களில் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்ததால், அதிகாலையில் இருந்தே கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்து வந்துசென்றனர். இத னால், வழக்கமாக காணப்படும் கூட்டம் இல்லை.இதேபோல, அரியலூர், பெரம் பலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து, தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகு வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT