Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப்படி மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் காஞ்சி - செங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாண - மாணவியர் 47 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஒரு மாதமாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இப்போராட்டங்களின எதிரொலியாக கடந்த 29-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 30-ம் தேதி தமிழக ஆளுநரும் இதற்கான ஒப்புதல் அளித்தார்.
மெடிகல் கட்- ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர, அரசுப் பள்ளிகளில் படித்த 747 மாணவ - மாணவியர் தகுதியுடையோர் என மாவட்ட வாரியாக மதிப்பெண்கள் பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளைச் சார்ந்த மொத்தம் 47 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கீர்த்தனா 267 கட்-ஆஃப் மற்றும் 747 பெயர் பட்டியலில் 32-வது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வுபெற்ற மாணவ - மாணவியருக்கு ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கடந்த 29-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT