Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 674-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக இருந்ததால் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 640-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,617-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x