Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
நீலகிரி மாவட்டம் கூடலூர் அத்திக் குன்னா அருகிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினருடன், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
சிறுத்தையை உடற்கூராய்வு மேற்கொண்டபோது, அதன் பின்னங்காலில் தோட்டா போன்ற ஒரு பொருள் துளைத்திருப்பதும், வயிற்றுப் பகுதியில் ரப்பர் குண்டு போன்ற பொருள் இருந்த தும் தெரியவந்தது.
மாவட்ட வன அலுவலர் சுமேஸ் சோமன் தலைமையில், உதவி வனப் பாதுகாவலர் விஜயன், தேவாலா வனச் சரகர் கணேசன் மற்றும் தேவாலா போலீஸார், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
சத்தியமங்கலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட டைகர் என்ற மோப்பநாய் உதவியுடன், அத்திகுன்னா பகுதியில் வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT