Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக, திருப்பூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகளிடம் நடைபெற இருந்த நேரடி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவன்கொந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் (ஐடிபிஎல்) விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், திட்டத்தைசாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பில் கூறப்பட்டு வருகிறது.இத்திட்டப் பணிகளுக்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவிக்கும்விவசாயிகளிடம் நவம்பர் 3, 4, 5, 6மற்றும் 9-ம் தேதிகளில் நேரடிவிசாரணை நடைபெறும் எனஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகளுக்கான நேரடி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திட்டத்துக்கான அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் தனித் துணை ஆட்சியர் புஷ்பா வெளியிட்ட அறிக்கையில், "இருகூர் - தேவன்கொந்தி குழாய்பதிப்பு திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, திருப்பூர் மாவட்டம்காங்கயத்தில் உள்ள படியூர்,சிவன்மலை, கீரனூர், மரவப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களின் பேரில், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்தநேரடி விசாரணை நிர்வாககாரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். தனித் துணை ஆட்சியரின் இந்த முடிவுக்கு ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, "விவசாயிகளின் நிலை அறிந்து, மேற்கண்ட திட்டத்தை சாலை வழியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களதுவேண்டுகோள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT