Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
உடுமலை: சென்னை ஓமந்தூர் ராமசாமி பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றியவர் மருத்துவர் ஜோதிலிங்கம் (42), அவரது மகன் சர்வேஷ் ராஜா (11). தன் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூருக்கு குடும்பத்துடன், ஜோதிலிங்கம் வந்திருந்தார்.நேற்று மாலை அவரும், அவரது மகனும் கடத்தூர் ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இருவரின் சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர், உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கணியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT