Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

சைனிக் பள்ளியில் முதல்முறையாகமாணவிகள் சேர்க்கைக்கு அறிவிப்பு

உடுமலை: அமராவதி சைனிக் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகளான நிலையில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சைனிக் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 10 சதவீத இடங்கள் மாணவிகள் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 6 மற்றும் 9-ம் வகுப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2021 ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் முறையில், சரியான விடையை தேர்வு செய்தல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதலாம். 9-ம் வகுப்புக்கான தேர்வு மட்டும் ஆங்கிலத்தில் நடைபெறும்.

அமராவதி நகர், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சாவூர், உடுமலை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். 6-ம் வகுப்புக்கு 1.4.2009 முதல் 31.3.2011-ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 9-ம் வகுப்புக்கு 1.4.2006 முதல் 31.3.2008-ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து விவரங்களையும் https://aissee.nta.nic.ac.in என்ற பள்ளியின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x