Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆய்வு மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக அணுபுரத்தில் புதிதாக அடைகாக்கும் மையம் (இன்குபேசன் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் திறப்பு விழா, இந்திய அணு சக்தி இயக்கத் தந்தையாக கருதப்படும் ஜஹாங்கீர் ஹோமிபாபாவின் 111-வது பிறந்த நாளையொட்டி நேற்று கல்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், அடைகாக்கும் மையத்தை இந்திய அணுசக்தித் துறைச் செயலர் மற்றும் தலைவர் கே.என்.வியாஸ் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, இந்த ஆய்வு மையம் சார்பில் தெர்மோகிராஃபி எனும் மார்பகப் புற்றை தொடக்க நிலையிலேயே கண்டறியும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த ராமச்சந்திரா உயர் கல்வி நிறுவனம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆய்வு மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இயக்குநர் அருண்குமார் பாதுரி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதேபோல், சுற்றுச்சூழல் கதிர்வீச்சை அளவிடும் கதிர்வீச்சு மானிட்டர்மற்றும் வேளாண்மைச் சார்ந்த விதைகள், பயிர்கள் மற்றும் பிற தொடர்புடைய பகுதிகளில் கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளில், கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பெரம்பலூர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கிருஷிவிக்யான் கேந்திரா மற்றும் பெங்களூரு, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT