Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தொகுதி வாரியாக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து நான் கரை ஆண்டுகள் கடந்து விட்டது. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங் களை வகுத்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமைச் சர்கள் மற்றும் எம்பி ஆகியோர் தலா 5 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். இதுதொடர்பாக புதுச்சேரிகாங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எதிர்வரும் 2021-ம்ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு வில்லிய னூர், ஊசுடு, மண்ணாடிப்பட்டு திருபுவனை, மங்கலம் ஆகிய தொகுதி களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயமும்,

ஏனாம், மாஹே, அரியாங் குப்பம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை ஆகிய தொகுதி களுக்கு சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம், மணவெளி, உப்பளம் ஆகிய தொகுதிகளுக்கு சமூக நலத்துறை அமைச் சர் கந்தசாமியும், காலாப்பட்டு, லாஸ்பேட்டை, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம் ஆகிய தொகுதிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானும், திருநள்ளாறு, காரைக்கால் (தெற்கு), காரைக்கால் (வடக்கு), டிஆர்பட்டினம், நெடுங்காடு ஆகியதொகுதிகளுக்கு வேளாண் அமைச் சர் கமலக்கண்ணனும், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, இந்திரா நகர் ஆகிய தொகுதிகளுக்கு வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் 45 காங்கிரஸ்நிர்வாகிகள், 30 வட்டார தலை வர்கள் தொகுதி வாரியாக தேர்தல் பணியாற்ற பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முதல்வரும் இந்த தேர்தலுக்கான பணிக ளில் ஒருங்கிணைந்து செயல்படு வார்கள்’’ இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x