Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
அறிவித்த தேதியிலேயே காவலர் தேர்வை நடத்த வேண்டும் என்றுதிமுக எம்எல்ஏ சிவா வலியுறுத் தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29தொழில்நுட்ப கையாளுநர் ஆகியபணிகளுக்கு கடந்த 2018-ல் விண் ணப்பம் பெறப்பட்டன. அப்போது இளைஞர்கள் வயது தளர்வு கேட்டு நீதிமன்றம் சென்றதால் தடைபட்டது. பின்னர் நீதிமன்றம் வயது தளர்வு அளித்தும் காவலர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.
இதையடுத்து தொடர் அழுத் தத்தின் காரணமாக வரும் 4-ம் தேதி உடல் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக இளையோர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவலர் தேர்வுக்கு ஆளுநர் தடை ஏற்படுத்தியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
துணைநிலை ஆளுநர் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் தலையிட்டு மக்களுக்கு கிடைக்கும் திட்டங்களை தடுத்து வருகிறார். தற்போதைய முறையில் ஆட்கள் தேர்வு பெற்றால் முறைகேடு நடைபெறும் என்று அவர் நினைத்தால், முறைகேடு நடைபெறாத வகையில் காவலர்தேர்வு செய்வதற்கான ஆலோச னையை தெரிவித்து, அதன்படி நடத்தச் செய்ய வேண்டும். அதுவே சிறந்த நிர்வாகிக்கான செயலாகும். ஆனால் ஆளுநரின் இந்த திடீர் தடை உத்தரவால் பயிற்சி பெற்றுவந்த இளையோர் மன வேத னைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே ஆளுநர் கிரண்பேடி உடனடியாக தனது முடிவை கைவிட்டு அரசு அறிவித்தபடி 4-ம்தேதி காவலர் தேர்வை நடத்தச் செய்ய வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT