Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியே அமையும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

மயிலாடுதுறை

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியே அமை யும் என புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி தெரிவித்தார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீ னத்தின் 26-வது ஆதீனகர்த்தராக இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சித்தியடைந்த ல சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஆதீனவளாகத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தின் கும் பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, பின் னர் செய்தியாளர்களிடம் கூறியது:

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் முன்னேற் றத்தில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது. அதனால்தான் நாட்டின் பொருளாதாரம் 9 சதவீதம் உயர்ந்தது. தற்போது நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 8.1 சதவீதமாக உள்ளது.

கரோனா பேரிடர் சூழலால் வேலைவாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவ தில் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். மேலும், விலைவாசியை குறைத்தல், சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருதல், மக்களைப் பாதுகாத்தல் உள்ளிட் டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பாகிஸ் தான், சீனாவை காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது.

2021 சட்டப்பேரவைத் தேர்த லுக்குப் பின் தமிழகத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சி அமைவது உறுதி.புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக,என்.ஆர்.காங்கிரஸ் ஆகியன எதிர்க்கட்சிகள் அல்ல. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் எங்க ளுக்கு எதிர்க்கட்சி. மாநில வளர்ச் சிக்கு எதிராக அவர் இடையூறு செய்து வருகிறார்.

மத்திய அரசின் இடையூறு, துணைநிலை ஆளுநரின் இடை யூறு, செயல்படாத எதிர்க்கட்சி இவற்றை வைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம். விவ சாயத்தில் 4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம். சட்டம்- ஒழுங்கு, விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முதல் இடம் என 4 விருதுகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு எங்களுக்கு அளித்துள்ளது. ஆனால், கிரண்பேடி புதுச்சேரி அரசை முடக்கும் வேலையை செய்கிறார். அனைத்தையும் முறி யடித்து 2021-ல் கண்டிப்பாக புதுச் சேரியில் மீண்டும் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x