Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கம் கோரிக்கை

சிவகங்கை

மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர்-அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதநிலையில், மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இடஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளைப் போன்று உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை, விலையில்லாப் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இதனால் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர்- அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நீ. இளங்கோ கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம். அரசுப் பள்ளியைப் போன்று உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள்தான் படிக்கின் றனர். அவர்களில் பலர் சிரமப்பட்டுத் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெறு கின்றனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு பாதிக்காத வகையில் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x