Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங் களில் உள்ள பல்வேறு பணிமனை கள் முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப் பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை முன்பணம், போனஸ் வழங்காதது, 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையைத் தொடங்காதது ஆகியவற்றைக் கண்டித்தும், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பண்டிகை முன்பணத்தை உடனே தர வேண்டும். 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை உடனே வழங்க வேண் டும். பல மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். சராசரி விடுப்பு என பிடித்தம் செய்த விடுப்பு மற்றும் ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் தஞ்சாவூர் புறநகர் கிளை, நகர் கிளை, அரசு விரைவு பேருந்து கழக பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மத்திய சங்க தலைவர் ஜி.சண்முகம், சிஐடியு மத்திய சங்க துணைத் பொதுச்செயலாளர் ராமசாமி, ஐஎன்டியுசி மத்திய சங்க துணை தலைவர் மணிகண்டன், தொமுச நகர் கிளை செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன், சிஐடியு கவுரவத் தலைவர் மனோகரன், ஓய்வுபெற்றோர் நலச் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை, ஐஎன்டியுசி மத்திய சங்க துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சியில்...
திருச்சி மாநகரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை, தீரன்நகர், புறநகர், கன்டோன்மென்ட் ஆகிய பணிமனைகள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஹெச்எம்எஸ், ஏஏஎல்எல்எப், எம்எல்எப் ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
பெரம்பலூரில்...
நாகப்பட்டினத்தில்...
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நாகையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச நாகை பணிமனை செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்தார்.
கரூரில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT