Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை நகர மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டிஎஸ்பி எம்.சுபாஷினி உத்தரவின்பேரில், ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி எம்.சுபாஷினி கூறும்போது, "உதகை நகர மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இலவச மின்சார இணைப்புக்கு லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அங்கு திடீர் தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது, அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணம் குறித்து ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT