Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்தியின் எதிரொலியாக படப்பை அருகே உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மணம்பாக்கம் கிராம ஏரியை சிலர் அடிக்கடி உடைப்பதால், தண்ணீர் வீணாவதாக தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற செய்தி நேற்றுமுன்தினம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், நேற்று முன்தினமே ஒன்றிய நிர்வாகத்தினர் மணல் மூட்டைகளைகொண்டு ஆக்கிரமிப்பாளர்களால்உடைக்கப்பட்ட ஏரியின் கரையை சீரமைத்தனர். அம்மணம்பாக்கம் ஏரி உடைப்பு செய்தியை வெளியிட்டு சீரமைப்பு பணியை மேற்கொள்ள உதவிய நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். ஏரியை ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
மேலும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 80 சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிக் கரைகள் உடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஏரிகளை உடைக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT