Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென் பெண் ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், கடந்த 25-ம் தேதி 80 அடியை கடந்தது.
அணையில் 1,530 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 277 கனஅடி நீர் வந்தது.
85 அடியை கடந்தது
அணைக்கு விநாடிக்கு 755 கனஅடி நீர் வருகிறது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT