Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எ.கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ஊர்ப்புற நூலகத்தின் பயன்பாட்டுக்காக ரூ.4,000 மதிப்புள்ள புத்தக அலமாரிகளை ஓய்வுபெற்ற ஆசிரியர் வெள்ளை, மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமாரிடம் வழங்கினார். நூலகர் தங்கப்பாண்டி, பணியாளர் தமிழரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
சிலுக்குவார்பட்டி கிளை நூலகத்தில் அரசின் போட்டி தேர்வுக்காக பயிற்சி பெற்ற சுமா என்பவர், குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று வனத்துறையில் வனக்காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து, அவர் நூலகத்துக்கு ரூ.1,000 நிதிஉதவி அளித்து புரவலராகச் சேர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT