Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
ரயில்களில் பெண்கள் அச்சமின்றி பயணம் செய்வதற்கு உதவும் செல்போன் செயலி குறித்து, தஞ்சையில் நேற்று பெண் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு தெற்கு ரயில்வே சார்பில் ‘ஆபரேஷன் மை சஹெலி’ என்ற செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நேற்று தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், சப்-இன்ஸ் பெக்டர்கள் வெங்கடாசலம், மனோ கரன் மற்றும் போலீஸார், ரயிலில் பயணிக்க வந்த பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், கரோனா தடுப்பு விதி முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மருத்துவ உதவிக்கு 104, பாதுகாப்புக்கு 182 என்ற இலவச எண்களில் தொடர்பு கொள்ள லாம் எனவும் பெண்களிடம் எடுத் துக் கூறினர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் வந்து நின்ற ஜன சதாப்தி ரயிலில் ஏறி பெண்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
‘ஆபரேஷன் மை சஹெலி’ செயலி குறித்து போலீஸார் கூறியபோது, “இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ரயிலில் பயணிக்கும் பெண்கள் போலீஸாரால் கண்காணிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சி னைகள் நிகழாமல் தடுக்கப்பட்டு, பெண்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம்.
குறிப்பாக, கர்ப்பிணிகள் தங்களுக்கு ஏதாவது அத்தியா வசிய தேவை ஏற்படும்போது, இந்த செயலியில் தொடர்புகொண்டால், அடுத்த ரயில் நிலையத்திலேயே பெண் போலீஸார் ரயிலில் ஏறி உதவுவார்கள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT