Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
தூத்துக்குடி: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 10 துணை கண்காணிப்பாளர்கள், 44 ஆய்வாளர்கள், 123 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட எல்லையோரங்களில் 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இதுதவிர ‘டெல்டா’ எனும் 6 அதிரடிப்படையினர் மற்றும் ‘ஆல்பா’ எனும் 8 அதிரடிப்படையினர் அடங்கிய காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதலாக 26 நான்கு சக்கர வாகன ரோந்து குழு, 9 இரு சக்கர சாலை ரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT