Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM
மார்கழி மாதம் முழுவதும் சிவன், பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மார்கழி முதல்நாளான நேற்று புதுவையில் உள்ள கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்த்பபட்டன. வேதபுரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், மணக்குள விநாயகர் கோயில், கவுசிக பாலசுப்பிரமணியர் கோயில், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோயில்உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில்களில் பிரசாதம் வழங்கி மாதப்பிறப்பை வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளும் எடுக்கப் பட்டிருந்தன.
பல இடங்களில் வீதியில் கடவுள் பாடல்களை இசைத்தபடி பஜனைகளும் நடைபெற்றன. மார்கழி மாதம் பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணமயமாக கோலமிடுவது வழக்கம். பலரும் கோலங்களை வரைந்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT