Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

பொறுப்பேற்பு :

திருச்சி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரிவு தொழிற்சாலையான திருச்சி எச்இபிஎப்பின் பொது மேலாளராக என்.கே.அகர்வால் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பட்டதாரியான அகர்வால், 1987-ம் ஆண்டு டெஹாராடூனில் உள்ள ஆட்டோ எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் உதவிப் பணி மேலாளராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு ஆயுதத் தொழிற்சாலைகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இங்கு பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு மும்பையில் உள்ள ஆர்மர்டு வெஹிக்கிள்நிகாம் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தி மற்றும் திட்டமிடலில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x