Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM
வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி 2 நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று தொடங்கி இன்று வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 220 வங்கிகளைச் சேர்ந்த 1,500 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, சங்கத்தின் தலைவர் மில்டன் தலைமை தாங்கினார். சுரேஷ்குமார், ரஜினி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வங்கிகள் தனியார் மயமாக்கல் செய்வதை கண்டித்து முழக்கமிட்டனர்.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வழக்க மான வங்கி பரிவர்த்தனைகள், காசோலை பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன. ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல் நடை பெறுகிறது. ஏ.டி.எம் மையங்களில் போதிய அளவு பணம் இருப்பு உள்ளதால் இன்று வரை எந்தப் பிரச்சினையும் இருக்காது என கூறப்படுகிறது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங் கியது. வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்தில், மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கிகளை சேர்ந்த சுமார் 1,800 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.900 கோடிக்கு வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப் பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள், மத்திய அரசின் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து முழக்கமிட்டனர். வங்கி ஊழியர்களின் போராட்டம் இன்றும் (17-ம் தேதி) தொடர்கிறது. இதனால், பண பரிவர்த்தனை மற்றும் நகை கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களுக்காக வங்கிகளை தேடி வரும் வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல் கின்றனர்.
திருப்பத்தூர்
ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரவிபாபு, செயலாளர் சார்லஸ், ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சாமிகண்ணு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும், வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்யக்கூடாது, வங்கி சேமிப்பு தொகைக்கு சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது, வங்கி ஏடிஎம் அட்டையை பயன்படுத்த பெறப்படும் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment