Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM

குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் :

குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

தென்காசி

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. காலை, இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், அதைத் தொடர்ந்து முருகர், நடராஜர், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் தேர் என, 5 தேர்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற 18-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு பச்சை சார்த்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 20-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தீபாராதனை, 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x