Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

துப்பாக்கித் தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி :

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் தொடங்கிய ஆயுதக் கண்காட்சியைப் பார்வையிடும் பொதுமக்கள்.

திருச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை யில் ஆயுத கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

பாதுகாப்புத் துறை தயாரிப்புகளை உள்ளூர் மக்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் நாடு முழுவதும் இந்த ஆயுத கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை பாதுகாப் புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஆயுத கண்காட்சியின்போது ஆலையின் பொது மேலாளர் ராஜீவ் ஜெயின் பேசியது:

இங்கு தயாரிக்கப்படும் நவீன திருச்சி அசால்ட் ரைபிள்ஸ் ரக துப்பாக்கிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்று இதுவரை 30,000 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 78,000 துப்பாக்கிகளை தயாரித்து வழங்க ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு பாதுகாப்புப் படையணிகளும் திருச்சி துப் பாக்கி தொழிற்சாலையில் தயா ரிக்கப்படும் துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன என்றார்.

இந்த ஆயுத கண்காட்சியை டிச.19-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x