Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி மாணவி கண்டெடுத்த : ராஜராஜ சோழனின் இலங்கை நாணயங்கள்

ராமேசுவரம்

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவி கு.முனீஸ்வரி 10-ம் நூற் றாண்டு ராஜராஜசோழனின் இலங்கை நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

திருப்புல்லாணி சுரேஷ்-சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்புமன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத னால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்தோடு கண் டெடுத்து வருகின்றனர்.

இப்பள்ளி பிளஸ் 2 மாணவியான திருப் புல்லாணியைச் சேர்ந்த கு.முனீஸ்வரி, முத லாம் ராஜராஜசோழனின் பெயர் பொறித்த 3 இலங்கை நாணயங்களை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

மாணவி கண்டெடுத்த இந்த நாண யங்களின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப் பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப் பட்டுள்ளன. இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறார். இதை ஈழக்காசு என அழைப்பர்.

போர் மூலம் முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்ட தன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளி யிடப்பட்டிருக்கலாம். இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளி யிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

மாணவி கண் டெடுத்த மூன்றும் செம்பால் ஆன ஈழக் கருங்காசுகள். இலங்கையில் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர்களின் ஆளுகையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்திலும் புழக்கத்தில் இருந்துள்ளன. முன்னதாக, ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட ஊர்களில் கிடைத்துள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x