Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
மதுரையில் தீபாவளி பண் டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நேதாஜி சாலையில் ஒருவழிப் பாதையாக அதாவது தங்க மயில் நகைக் கடை முதல் முருகன் கோயில் சந்திப்பு வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. தீபாவளிக்கு பிறகும் அந்த சாலையில் ஒருவழிப் பாதை தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.
இருப்பினும் இதை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றி உத்தரவிட்டார். இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT