Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்க வாசல் திறப்பையொட்டி, திருச்சி யில் டிச.13-ம் தேதி(இன்று) இரவு 8 மணி முதல் டிச.14-ம் தேதி(நாளை) இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தெரி வித்துள்ளது:
ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை(டி.ச.14) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (டிச.13) இரவு 8 மணி முதல் நாளை(டிச.14) இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கரூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் முசிறியிலிருந்து நம்பர் 1 டோல்கேட் வழியாக தஞ்சாவூர் செல்ல வேண்டும். தஞ்சை, புதுக்கோட்டையிலிருந்து கரூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் சஞ்சீவி நகர், நம்பர் 1 டோல்கேட், முசிறி வழியாகச் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர், கடலூர், துறையூர், அரியலூர் செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் அண்ணாசிலை, ஓடத்துறை, ஓயாமரி சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலை, கொண்டையம்பேட்டை, நம்பர் 1 டோல்கேட் வழியாகச் சென்று வர வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்தி லிருந்து ரங்கம், திருவானைக் காவல் வரக்கூடிய நகர பேருந்து கள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் அண்ணாசிலை, ஓடத்துறை, ஓயாமரி சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலை, கொண்டையம் பேட்டை, நம்பர் 1 டோல்கேட் வழியாகச் செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத் திலிருந்து ரங்கம் செல்லும் நகரப் பேருந்துகள் அனைத்தும் மாம்பழச் சாலை, திருவானைக்காவல், சோதனைச் சாவடி எண்.6, காந்தி சாலை வழியாக ரங்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அம்மா மண்டபம், மாம்பழச் சாலை, அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
வெளியூரிலிருந்து ரங்கம் வரும் பேருந்து மற்றும் வேன்கள் அனைத்தும் கொள்ளிடக் கரை வழியாக பஞ்சக்கரையில் யாத்ரிகர் நிவாஸ் எதிரேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, மீண்டும் அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். மேலும், நெல்சன் சாலையிலுள்ள சங்கர்தோப்பு வாகன நிறுத்துமிடத் தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். இருசக் கர வாகனத்தில் வரும் பக்தர்கள் பஞ்சக்கரை வழியாக மேலூர் நெடுந்தெரு மந்தை, மேலவாசல் வழியாக தெப்பக்குளத்தைச் சுற்றி வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயிலுக்கு செல்லலாம். மத் ஆண்டவன் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயிலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT