Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM
கரோனா தொற்றால் உயிரிழந்தவர் களுக்கு அரசு சார்பில் வழங் கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந்தொற்றால் பாதிக் கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த நபர்களின் குடும்பங் களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் பெயர்கள் அரசால் வெளியிடப்பட்ட அரசிதழில் இடம் பெறாதவர்களில், அவர்களது இறப்பு கரோனா தொற்றால் ஏற்பட்டது தானா என்பதை உறுதி செய்து, அதற்கான சான்று வழங்குவதற்காக COVID-19 Ascertaing Committee (CDAC) என்ற குழு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர், வேலூர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 6 நபர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு உயிரிழந்திருந்தால் அவரது பெயர் அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் CDAC குழுவுக்கு உயிரிழந்த நபர் கரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தார் என்பதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப் பிக்கும் பட்சத்தில் இக்குழுவானது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இறப்பானது கரோனா பாதிப்பால் ஏற்பட்டதா? என ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வழங்கும்.
ஆகவே, அரசிதழில் பெயர்கள் இடம் பெறாத உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் இந்த குழுவுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வேலூர் அரசு பெண்ட்லேன்ட் மருத்துவ மனையில் உள்ள இணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், வேலூர் என்ற அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்கலாம்.
மனு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1077’ அல்லது 0416-225816 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT