Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முக சுந்தரம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமர்வுகள் நடந்தன. இதில் ஒரே நாளில் 1,420 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 875 வழக்குகளில் சமரசம் செய்யப்பட்டன.
வங்கி தொடர்பான 210 வழக்குகள்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில், சிறு வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என 665 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ.5 கோடியே 69 லட்சம் தீர்வுத் தொகையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திரா, தலைமைக் குற்றவியல் நீதிபதி கவிதா, சார்பு நீதிபதி கதிரவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன் மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவர் ஜி.புவனேஷ்வரி முன்னிலை வகி த்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வங்கி வாராக் கடன் வழக்குகள் 196, நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிற வழக்குகளில் 4,003 என மொத்தம் 4199 வழக்குகளில் முடிவு காணப் பட்டது.
வழக்குகளை விசாரிக்க ஒன்பது அமர்வுகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.9,44,12,841-க்கு தீர்வு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT