Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் : சத்தான உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

மதுரை: மதுரை வக்பு வாரியக் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் வாய்ஸ் டிரஸ்ட் சார்பில், மாணவிகளுக்கு சத்துணவு, தூய்மை குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் முகமது அஸ்லம் தலைமை வகித்து பேசுகையில், மாணவ, மாணவியர் தினமும் சத்தான சிறுதானிய உணவு வகையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட திட்ட அலுவலர் கெலன் ரோஸ், சத்தான, வைட்டமின் உணவுகள் குறித்து விளக்கினார். மதுரை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பைரவி, கல்லூரி தாளாளர் ஜாபர், மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் னிவாஸ், வாய்ஸ் டிரஸ்ட் அமைப்பாளர் டி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x