Published : 11 Dec 2021 03:12 AM
Last Updated : 11 Dec 2021 03:12 AM
திருச்சி/ புதுக்கோட்டை/ கரூர்/ தஞ்சாவூர்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சிஐடியு சார்பில் நேற்று 10 நிமிடங்கள் வாகனங் களை நிறுத்திவைக்கும் போராட்டம் நடைபெற்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. இதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி, சிஐடியு சார்பில் நேற்று பகல் 12 மணி யில் இருந்து 12.10 வரை 10 நிமிடங்கள் வாகனங்களை இயக்காமல் நிறுத்திவைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று நடைபெற்ற வாகன நிறுத்தப் போராட்டத்துக்கு, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், பிஎஸ்என் எல்இயு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், ஆட்டோ சங்க செய லாளர் பக்ருதீன் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதேபோல, கம்பரசம்பேட்டை அக்ரஹாரம், காந்தி மார்க்கெட், திருச்சி அரசு மருத்துவமனை அருகில், திருவானைக்காவல், திருவெறும்பூர் கடைவீதி, காட்டூர் கடைவீதி, கருமண்டபம், புதுக் கோட்டை சாலை, ரங்கம், எஸ்ஐடி, சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் கோயில் அருகில், எடமலைப்பட்டிபுதூர் என மாநகரில் 13 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், ரங்கம், திருவானைக்காவல், காந்தி மார்க்கெட், எஸ்ஐடி, புதுக் கோட்டை சாலை, கருமண்டபம் ஆகிய பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா உட்பட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, சிஐடியு புறநகர் மாவட்டக் குழு சார்பில் மண்ணச் சநல்லூர் கிழக்கு, மண்ணச் சநல்லூர் மேற்கு, மணப்பாறை, துறையூர், பெல், தாத்தையங்கார் பேட்டை, வையம்பட்டி உட்பட 12 இடங்களில் போராட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.தர் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை, விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், கட்டுமானத் தொழிலாளர் சங்கம் அன்புமணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, புதுக்கோட்டையில் 32 இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்பட்டதால் நகரில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதேபோன்று, மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தலைமையில் தரைக் கடை வியாபாரிகள் சங்கத் தலை வர் தண்டபாணி, டாஸ்மாக் சங்கம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும், அரவக்குறிச்சி ஏவிஎம் முனையில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா முகமது தலைமையிலும், தோகை மலையிலும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற வாகன நிறுத்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment