Published : 11 Dec 2021 03:12 AM
Last Updated : 11 Dec 2021 03:12 AM

விராலிமலை அருகே பேராம்பூரில் குளத்தின் மதகுகள் உடைந்து வெளியேறிய தண்ணீர் :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பேராம்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கரில் உள்ள பெரியகுளத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முழுமையாக நீர் நிரம்பியது.

எனினும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மதகுகள் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. இது குறித்து அப்பகுதி விவசாயிகள், அலுவலர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில், பெரியகுளத்தின் 3 மதகுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செங்கல் கட்டுமானம் உடைந்ததால் நேற்று முன்தினம் இரவில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தது. இதையறிந்து, நீர்வள ஆதாரத் துறையின் செயற்பொறியாளர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் பெரியகுளத்தை ஆய்வு செய்து, மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்தனர். மேலும், மழைக் காலம் முடிந்ததும் ரூ.2.5 கோடியில் மதகுகள் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x