Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் - நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 9,16,678 பேர் வாக்களிக்கும் தகுதியுடையவர் :

கள்ளக்குறிச்சி/கடலூர்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 3 மாவட்டங்களிலும் 9,16,678 பேர் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக தேர்தல் ஆணைய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்மாவட்டதேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 1,30,441, பெண் வாக்காளர் 1,39,019, இதர வாக்காளர்கள் 53 என மொத்தம் 2,69,513 வாக்காளர்கள் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருப்பதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் ஆர்.சங்கர்,மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, பேரூராட்சி செயல் அலுவலர்கள், மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான என்.தர் வெளியிட்டார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 140 வாக்குச்சாவடி மையங்களும், 59,566 ஆண் வாக்காளர்களும், 62,648 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,22,233 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர்

இதே போல் கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,886, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,69,941, இதரர் 104, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,24,931 ஆகும்.

வடலூர் மற்றும் திட்டக்குடி நகராட் சிகள் வரையறை செய்யப்படாததால் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x