Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM
அரசு மற்றும் தனியார் அலுவல கங்கள், நிறுவனங்களில் மகளிருக்கு உட்புகார் குழு அமைத்தல் வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கலையரங்கத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் அரசு சட்டக்கல்லூரி இணைந்து, பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.நாதா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலககட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள் சிறு மற்றும் பெரிய கடைகளில் (துணிக்கடை, நகைக்கடை, பீர் கம்பெனி, 10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு (Sexual Harassment of Women Workplace Prevention Prohibition and Redressal Act 2013-ன் படி) அலுவலக உட்புகார் குழு அமைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் குறைந்த பட்சம் 5 நபர்கள் இருக்க வேண்டும். ஐந்து நபர்கள் குழுவில் தலைவர் கட்டாயமாக பெண்ணாக இருக்க வேண்டும்.
இந்த உட்புகார் குழு 10 பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் அமைக்கப்பட வேண்டும். 10 பணியாளர்களுக்கு குறைவாக பணிபுரியும் அலுவலகங்கள் மாவட்ட அளவிலான உள்ளூர் புகார் குழு மூலம் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்புகார் குழு அமைத்து அதன் விவரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் தெரிவித்திடவும், அவ்வாறு குழு அமைக்க தவறினால் ரூ.50ஆயிரம் வரை அபராதமாக செலுத்த நேரிடும் என்றார்.
தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமைகள் தடுப்பது தொடர்பான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச் சியில் மாவட்ட அரசு அலுவலர்கள் பள்ளிக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
கடலூர்
மாவட்டஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) செல்வி, கண்காணிப்பாளர் சுமதி, உளவியல் ஆலோசகர் மனோகர், வழக்கறிஞர் வத்சலா, பாதுகாப்பு அலுவலர் ஆண்டாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழுவில் குறைந்த பட்சம் 5 நபர்கள் இருக்க வேண்டும். ஐந்து நபர்கள் குழுவில் தலைவர் கட்டாயமாக பெண்ணாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT