Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM
மதுரை யா.ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சரவணன் லஞ்சம் தவிர்க்க தனது பெயரில் விழிப் புணர்வு போர்டு வைத்துள்ளார்.
அதில், ‘யா.ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி.சரவணன் ஆகிய நான், யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை.
என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரி டமும் எந்தவித பொருளோ, பணமோ கொடுக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு போர்டு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஆய்வாளர் சரவணன் தற் போது மதுரையில் வசிக்கிறார். ஏற்கெனவே ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணனிடம் பணிபுரிந் துள்ளார். டெல்லியில் சைபர் கிரைம், குற்றப்பிரிவுகளில் பணி யாற்றி உள்ளார்.
இது குறித்து ஆய்வாளர் சரவணன் கூறியதாவது: பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும்போது காவல் நிலையம் வரும் சிலர் உதவுவது போன்று இடைத்தரகர் களாகச் செயல்படுகின்றனர். காவல் நிலையம், காவல் அதிகா ரிகளின் பெயரைச் சொல்லி புகார்தாரர், எதிர் மனுதாரர்களிடம் பணம் பெறுகின் றனர்.
நான் சரியாக இருக்கும்போது, எனது பெயரைச் சொல்லி பணம் வாங்குவது தவறு என உணர்ந்தேன். புகார் தாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்தான் இந்த போர்டு வைத்துள்ளேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT