திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 06 Dec, 2021 03:08 AM
Published : 06 Dec 2021 03:08 AM Last Updated : 06 Dec 2021 03:08 AM
மதுரை: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (டிச.6) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட வழி பாட்டுத் தலங்கள், ரயில், பேருந்து, விமான நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. கூடுதல் ரோந்து செல்ல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர், மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT