திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 06 Dec, 2021 03:08 AM
Published : 06 Dec 2021 03:08 AM Last Updated : 06 Dec 2021 03:08 AM
மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி பயிரில் தண்டு கூன்வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் சுரேஷ், மத்தக்கரை கிராமத்தில் பருத்தி பயிரை ஆய்வு செய்தார். பின்னர் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குநர் விமலா மற்றும் வேளாண் அலுவலர்கள், அட்மா திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT