Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

குட்டை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு :

திருச்சி

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மலர். இத்தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன் 3-வது குழந்தை பிறந்தது.

எனவே, தாத்தையங் கார்பேட்டை அருகேயுள்ள கீரிப்பட்டியில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் மலர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் விளையாடச் சென்ற இவரது 2-வது குழந்தையான ஜெயயை(3) நீண்டநேரமாகக் காணவில்லை. கடைசியாக வண்ணான்குட்டை பகுதிக்கு சென்றதாகத் தெரிய வந்ததால், குட்டையில் இறங்கித் தேடியபோது, அதிலிருந்து ஜெய உடல் மீட்கப்பட்டு, துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ஜெய இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x