Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

மணலூர்பேட்டை வழியாக - கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளுக்கு நேரடி பேருந்து வசதி :

திருவண்ணாமலை-திருச்சி இடையேயான பேருந்து சேவை தொடங்கி வைக்கும் அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி

புதிய வழித்தடத்தில் திருவண்ணா மலை-திருச்சி இடையே பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித் தடங்களை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "மணலூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை - திருச்சி, திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை, கூவனூர், தியாகதுருகம், அசகொளத்தூர், அடரி, வேப்பூர், பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு ஒரு பேருந்து தினசரி இரண்டு நடைகள் இயக்கப்படவுள்ளன. இதனால் பயண தூரமும் பயண கட்டணமும் குறையும். திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை, திருவரங்கம், கூவனூர், தியாகதுருகம் வழியாக தினசரி 6 நடைகள் இயக்கப்படவுள்ளன. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை களுக்கு நேரடியாக பேருந்து வசதி கிடைக்கும். இதனால் கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவர்.

எனவே, போக்குவரத்து தொழி லாளர்கள் இவ்வழித்தடங்களில் முறையாக பேருந்துகளை இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் அனைவரும் இந்த வழித்தடத்தில் இயக்கப் படும் பேருந்துகளை பயன் படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x