Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM
ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ரேஷன் கடைகளில் தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி என்ற இலக்கை அடைந்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ரேஷன் பொருட்களை வாங்க வருபவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரேஷன் பொருட்களை வாங்கச் செல்பவர்கள், இந்த விவரங்களை பூர்த்தி செய்ய தேவையான ஆவணங்களை, ரேஷன்கடைக்குச் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும். இவர்களில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருந்தால், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT