Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் - ஐயப்ப பக்தர்களுக்காக தேனியில் தகவல் மையம் :

வீரபாண்டியில் உள்ள தகவல் மையத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேனி

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தேனி அருகே வீர பாண்டியில் 24 மணி நேரமும் தகவல் மையம் செயல்படுகிறது.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் செல்லும் முக்கிய வழித் தடமாக தேனி மாவட்டம் விளங்குகிறது. இக்கோயிலில் மண்டல பூஜை வழிபாடு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் தேனி வழியே சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

இவர்களுக்கு வழிகாட்டவும், உதவவும் தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முன் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரம் செயல்படும். இந்த மையத்தில் சபரிமலையில் தினமும் நடைபெறும் பூஜை, தொடர்பு எண்கள், வழியில் தங்கிச்செல்ல வசதியுள்ள இடங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்து மைய ஊழியர்கள் கூறுகையில், பக்தர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு 1800 4251 757 என்ற கட்டணமில்லாத எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 14-ம் தேதி வரை இந்த மையம் செயல்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x