Regional01
பஸ்ஸில் பயணி தவறவிட்ட போன் ஒப்படைப்பு :
மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த ஞானசேகர், அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக மதுரை புதூர் கிளையில் பணி யாற்றுகிறார்.
நேற்று மாட்டுத்தாவணியி லிருந்து ஆரப்பாளையம் வழித் தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, பயணி ஒருவர் தனது விலை உயர்ந்த புதிய மொபைல்போனை தவற விட்டு விட்டார்.
அந்த மொபைல் போனை எடுத்த ஓட்டுநர் ஞானசேகர், அதில் உள்ள ஒரு எண்ணை தொடர்பு கொண்டு, பேருந்தில் மணிகண்டன் மொபைல்போனை தவறவிட்ட தகவலைத் தெரிவித் தார்.
அதன்பேரில், தகவலறிந்து வந்த மணிகண்டனிடம் ஓட்டுநர் ஞானசேகர் மொபைல்போனை ஒப்படைத்தார். இதற்காக மணி கண்டன் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார்.
