Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம் ஊராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசியதாவது:
ரூ. 259 கோடி செலவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப் படவுள்ளது. இத் திட்டத்தின்மூலம் பணகுடி பகுதிக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீரும், வள்ளியூர் பகுதிக்கு 65 லட்சம் லிட்டர் குடிநீரும், திசையன்விளை பகுதிக்கு 60 லட்சம் குடிநீரும் தினமும் வழங்குவது தொடர்பாக திட்ட அறிக்கையை தயார் செய்து வருகிறோம். மேலும், காவல்கிணறு, வடக்கன்குளம் ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 2 கிணறு, 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை சேமித்து, இரண்டு ஊர்களுக்கும் விநியோகிக்க ரூ.15 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திட்டப்பணிகள் 6 மாத காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT