Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM
பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார். காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் மது அருந்தியவர்களை பிடித்து, இனிமேல் பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என 470 நபர்களின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடந்த 28.9.2021ம் தேதி முதல் நேற்று முன்தினம்(29.11.21) வரை காவல்துறையின் அறிவுரையை பின்பற்றாத 543 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT